
இராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவில் மற்றும் தொழிற்சாலை அருகே திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மூடவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே கோவில் மற்றும் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் ஏற்கனவே டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வந்தது மக்களின் போராட்டத்தை அடுத்து இந்த கடை அகற்றப்பட்டது. மீண்டும் இன்று முதல் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளனர். இதை அடுத்து இன்று கடை திறக்கப்பட்டுள்ளது இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் கடையை அகற்ற வேண்டும். கோவில் மற்றும் தொழிற்சாலை உள்ளதால் பெண்கள் அதிகளவு வந்து செல்லக்கூடிய இந்த இடத்தில் டாஸ்மாக் கடை செயல்படக் கூடாது என ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளோம் அதன்பின் கடை அகற்றினர்.
தற்போது இந்த கடையை திறந்து இருப்பதால் போராட்டத்தை தூண்டிவிடும் விதமாக உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.