Home செய்திகள் மதுக்கடைகள் திறப்பு: தமிழகத்தில் ஏழு முதல் “ஏழரை” தொடக்கம்; அ.ச.உமர்பாரூக்..

மதுக்கடைகள் திறப்பு: தமிழகத்தில் ஏழு முதல் “ஏழரை” தொடக்கம்; அ.ச.உமர்பாரூக்..

by Askar

மதுக்கடைகள் திறப்பு: தமிழகத்தில் ஏழு முதல் “ஏழரை” தொடக்கம்; அ.ச.உமர்பாரூக்..

சாராயம் விற்று அரசு சாதிக்கப்போகிறது.

ஒன்னரை மாதம் குடிகாரனெல்லாம் குடிமகனாய் வாழ்ந்தான் செத்துப்போகாமல்.

அவன் வீட்டிலேயே முடங்கினாலும் குடும்பத்தில் ஒரு மரியாதை இருந்தது.

இப்போது குடிகெடுக்கும் குடியென அறிவித்த அரசு அதிகாரப்பூர்வமாக குடிகெடுக்கப்போகிறது.

அரிசி,பருப்பு,காய்,கறி வாங்க முட்டி மோதியதினாலாவது ஒரு அர்த்தம் இருந்தது. ஏழு முதல் மது வாங்க முட்டி மோதுவது அரசுக்கு அவமானமே!

கையில் காசு இல்லாமல் கண்ணீர் சிந்திய குடும்பங்களை கண்டோம். இனியென்ன அடகுக்கடையையும் சேர்த்தே திறந்தால் அண்டா, குண்டா எல்லாம் அடகுக்குப் போகட்டும். குடி அத்தியாவசிய தேவையாயிற்றே.

பிறகென்ன மக்கள் எக்கேடுகெட்டாலும் அரசின் கஜானா நிரம்புமல்லவா?

இவ்வாண்டு விவசாயம் செழித்தாலும் விவசாயி செழிக்கவில்லை அது குறித்து அரசுகள் கவலைப்பட்டதா?

ஊரடங்கால் சிறு குறு தொழில்கள் எல்லாம் நசிந்து போனதே அதை மேம்படுத்த என்ன திட்டமுள்ளது அரசிடம்?

சிறிய வணிகமெல்லாம் சிதைந்து போனதே அவர்கள் குறித்து சிந்தித்ததா? அரசு

மேலே உள்ள அரசோ ஒரே காமடியாய் செய்கிறது கை தட்டுவதும் கை விளக்கு பிடிப்பதும் பெரும் சாதனை என்கிறது போதாக்குறைக்கு இரு நூறு கோடியை பாழாக்கி பூத்தூவியது துப்புரவு பணியாளர்களின் வேலை பளுவைக் கூட்டியதுதான் மிச்சம். மக்கள் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்கவோ செயல்படவோ அங்கே ஆளில்லை.

வெறுமனே உத்தரவுகள் போடும் பிரதமர் உருப்படியாய் இதுவரை பேசவில்லை தமிழகம் நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கும் நிலையில்கூட கொடுக்கவேண்டிய நிதியை கொடுக்க மறுப்பதும் அதை தட்டிக்கேட்கமுடியாமல் தமிழக அரசு தவிப்பதும் வேதனையின் உச்சம்.

கொரோனா ஒரு கொடிய நோய்தான் என்றாலும் அது பல நல்ல சூழலை ஏற்படுத்தி உள்ளது அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள அரசுகளுக்கு ஆர்வமில்லை என்பதையே மதுக்கடை திறப்புபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

மக்கள் எப்படிப்போனால் என்ன நமக்கு வருவாய் வேண்டும் என்பதெல்லாம் நல்ல அரசுக்கான அரிகுறியல்ல.

நாம் எவ்வளவுதான் கத்தினாலும் அரசு மதுக்கடையை திறக்கப்போகிறது எட்டாம் தேதிமுதல் இவ்வளவு கோடி விற்பனை அவ்வளவுகோடி லாபம் குடிகாரன்களின் வரிசை இத்தனை கிலோமீட்டர் நின்றது கூட்ட நெரிசலில் இத்துனைபேர் சாவு கூட்டத்தை கட்டுப்படுத்தமுடியாமல் காவல்துறை திணறல் பலவேறு இடங்களில் மதுக்கடைகளை மூடச்சொல்லி பெண்கள் சாலை மறியல் எனும் செய்திகளை தினந்தோறும் பார்க்கலாம். எதுவெல்லாம் நடக்கக்கூடாது என நினைத்தோமோ இதுவெல்லாம் நடக்கப்போகிறது.

நாடு நாசமாய்ப்போக நாட்டை ஆள்பவர்களே முட்டி மோதினால் நாமென்ன செய்ய?

அச.உமர் பாரூக் மாநிலப்பொதுச்செயலாளர் Sdpi கட்சி

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com