Home செய்திகள் சக மாணவியர்கள் கிண்டல் செய்ததால் கோவில்பட்டி கல்லூரி மாணவி தற்கொலை..

சக மாணவியர்கள் கிண்டல் செய்ததால் கோவில்பட்டி கல்லூரி மாணவி தற்கொலை..

by ஆசிரியர்

கோவில்பட்டி அருகே உள்ள சிப்பிபாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல். இவரது மகள் திவ்யா(21). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு மாநில அளவில் நடந்த சிலம்பு போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார். இதே போல் மாநிலத்தில் நடந்த சிலம்பம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2-ம் தேதி சக வகுப்பு மாணவியர்கள், இந்த ஆண்டு சிலம்பு போட்டியில் எப்படி தங்கப்பதக்கம் பெற போகிறாய் என கிண்டல் செய்துள்ளதாக கூறி, திவ்யா தனது தந்தை பழனிவேலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் கல்லூரிக்கு வந்து பேராசிரியை சாரதா என்பவரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் கண்டிப்பதாக கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவியர்கள் மீண்டும் திவ்யாவை கிண்டல் செய்துள்ளனர். மேலும் திவ்யா தந்தை பற்றியும் கிண்டல் செய்த காரணத்தினால், அவர் கடுமையான மனஉளைச்சலில் இருந்துள்ளார். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் தாய் பேச்சியம்மாளிடம் கல்லூரியில் நடந்த விபரங்களை கூறி, அழுதுள்ளார். மேலும் இனி தான் கல்லூரிக்கு செல்லபோவதில்லை என்றும், சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ளபோவதில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேச்சியம்மாள் ஆறதல் கூறியுள்ளார்.

இருப்பினும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த திவ்யா தூக்கிட்டு தனது உயிரைமாய்த்துக்கொண்டார். தனது மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பேச்சியமாள் உறவினர்கள் உதவியுடன் திவ்யா உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இதுகுறித்து ஏழயிரம்பண்ணை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரிசோதனைக்கு பின்னர் திவ்யா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது கல்லூரி மாணவ, மாணவியர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து திவ்யாவின் தந்தை பழனிவேல் கூறும்போது, நாங்கள் எழுத படிக்க தெரியாதவர்கள். எங்கள் குடும்பத்தில் முதலில் எழுத படிக்க கற்றுக்கொண்டது எனது மகள் தான். எனது மகள் மாநில சிலம்பம் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், நடனம், பேச்சு போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். திறமையுள்ள எனது மகள் முன்னேறிவிடக்கூடாது, என அவரது வகுப்பு மாணவியர்கள் சிலர் ராகிங் செய்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி பேராசிரியரிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. இதனால் எனது மகளை இழந்துள்ளேன். இதற்கு போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.

சிலம்பாட்டத்தில் சாதனை படைக்க வேண்டும், சர்வதேச போட்டிகளில் பங்குபெற்று சாதிக்க வேண்டும் என்பது மட்டும் தான் திவ்யாவின் கனவாக இருந்துள்ளது. ஆனால் அவருடைய வருமையான வாழ்வினை, கிண்டல் செய்ததது, அவரது தன்னம்பிக்கை சீர்குலைய செய்ததது மட்டுமின்றி, அவரது உயிரியை மாய்த்து விட்டது. திவ்யா இன்று உயிரோடு இருந்தால் திருச்செங்கோட்டில் நடைபெறும் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்று, தனது சாதனையை நிகழ்த்தி இருப்பார். ஆனால் துரதிஷ்டவசமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நவினால் சுட்ட வடு என்ற வள்ளுவனின் வார்த்தைக்கு ஏற்ப தனது ஏழ்மை குறித்து பேசியவர்களுக்கு சிலம்பத்தினால் பதில் சொல்லி இருக்க வேண்டிய திவ்யா,தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com