மாணவர்கள் வாழ்க்கைக்கு தேவை நான்கு “D ” க்கள் , ( DISCIPLINE, DEDICATION, DEVOTION, DETERMINATION ) பள்ளி விளையாட்டு விழாவில் S.P. முரளி ரம்பா மாணவர்களுக்கு அறிவுரை…

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் நான்கு “D ” க்கள்  (DISCIPLINE, DEDICATION, DEVOTION, DETERMINATION) ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பக்தி , உறுதி, ஆகியவற்றை கடைபிடித்தால் வெற்றி பெறலாம் என பள்ளி விளையாட்டு விழாவில் S.P. முரளி ரம்பா மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆலந்தலை மீனவ கிராமத்தில் உள்ள பள்ளிகளான திருக்குடும்பம் உயர்நிலைப் பள்ளி நடுநிலைப் பள்ளி மற்றும் திருக்குடும்பம் தொடக்கப்பள்ளியில் 2018- 2019 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டி விழா இன்று (29 1 2019) நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் அவர் பேசுகையில்:- மாணவ மாணவிகள் எப்போதுமே படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும் அதாவது யோகா உடற்பயிற்சி மற்றும் மெடிடேஷன் போன்றவைகளில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் படித்த படிப்பும் நமக்கு ஞாபகம் இருக்கும்,

விளையாட்டுத்துறையில் நன்றாக விளையாடினால் மாவட்ட அளவில் பல்கலைக்கழகம் மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று அதன்மூலம் நல்ல வேலையில் சேர்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன நன்கு விளையாடுபவர்களுக்கு உதவி செய்வதற்கு காவல்துறை தயாராக உள்ளது. நல்ல ஆரோக்கியமான மனநிலை மற்றும் ஆரோக்கியமான உடல்நிலை ( healthy mind and healthy body )இருந்தால்தான் நன்றாக படிக்க முடியும், இந்தப் பள்ளிகளில் 90% மாணவர்கள் படிப்பதாக தலைமை ஆசிரியர் கூறினார்

கல்வியானது ஒரு ஆயுதம் கல்வி இருந்தால் நாம் எங்கு வேண்டுமானாலும் போகமுடியும், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் குழந்தைகள் படிப்பதற்கு உதவ வேண்டும் நன்கு படிக்கும் குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் நாங்கள் கூட உதவி செய்ய முடியும். நாம் பிறக்கும் போது எப்படி இருக்கிறோம் என்பது கடவுள் கொடுத்தது, நாம் இருக்கும்போது அப்படியே இருந்தால் அதற்கு நாம் தான் காரணம் ,நாம் முன்னேறுவதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளது நாம் நன்கு படித்து அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் நாம் இப்போதிருந்தே ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்

அதே மாதிரி நம் மாவட்டத்தில் மாநிலத்தில் நாட்டில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும் ,நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் அதற்கு தினமும் செய்தித்தாள் படிக்கவேண்டும். இப்போது எல்லோருடைய கைகளிலும் செல்போன் லேப்டாப் கணினி மற்றும் இணைய தள வசதி இருக்கிறது இது இரு பக்கம் உள்ள முனை உள்ள ஆயுதம் போன்ற நல்ல வழியில் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் கெட்ட வழியில் பயன்படுத்தினால் அது நம்மை அழித்துவிடும்

மாணவ மாணவிகள் மொபைல் பார்ப்பது கூடாது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர்கள் செல்போன் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் நம் வாழ்க்கைக்கு தேவையானது நான்கு “D ” க்கள் , ( DISCIPLINE, DEDICATION, DEVOTION, DETERMINATION ) ஒழுக்கம் ,அர்ப்பணிப்பு ,பக்தி ,உறுதி ,ஆகிய நான்காகும்

நான்கையும் அதாவது ஒழுக்கத்தை கடைபிடி த்து எந்த செயலில் ஈடுபடுகிறோமோ அதில் நம்மை முழுமையாக அர்ப்பணித்து அதன்மீது பக்தியுடனும் உறுதியுடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்று மாணவர்களை ஊக்கப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.

இவ்விழாவிற்கு தோமையார்புரம் பங்குத்தந்தை அருட்பணி விக்டர் லோபா தலைமை வகித்தார், பங்குத் தந்தை ஜெயக்குமார், குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி