
சாத்தான்குளத்தில் வணிகர்கள் இரண்டு பேர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய நீதி வழங்கிட வேண்டியும் தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட சுரண்டை, சேர்ந்தமரம், சாம்பவர் வடகரை, அகரகட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 1500 கடைகளை அடைத்து வியாபாரிகள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். தினசரி சந்தை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
ஏற்கனவே கொரோனா ஊரடங்கினால் குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயங்கிய நிலையில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பெட்ரோல் பங்குகள், அரசு அலுவலகங்கள் இயங்கின. பொது மக்கள் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.