பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோலியப் பொருள்களின் விலையையும், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு உருளையின் விலையையும் உயர்த்தி வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருகள்களின் விலை மிக கடுமையாக உயர்ந்து வருவது ஒரு புறம் என்றாலும், மறுபுறம் பொது முடக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில், எரிவாயு உருளை விலை உயர்வு சாமானிய மக்களை பாதிப்படை செய்வதால் உடனடியாக , பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வையும், எரிவாயு உருளையன் விலை உயர்வையும் ரத்து செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் பெட்ரோலியப் பொருள்கள் விற்பனை நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு , காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் மார்க்கெட் குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் ஆசை முஷிர் முன்னிலை வகித்தார்.இதில், வட்டாரத் தலைவர் சுப்பிரமணி இளைஞர் காங்கிரஸ் எம் எஸ் ஷா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
43
You must be logged in to post a comment.