திருவண்ணாமலை பாரத சாரண இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர்க்கு கௌரவிப்பு

திருவண்ணாமலை திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் கோவிட்-19 தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய தி.மலை பாரத சாரண சாரணிய இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலினுக்கு மாவட்ட ஆட்சியர் க.சு.கந்தசாமி விருது வழங்கி கௌரவித்தார்.மாவட்ட நிா்வாகம் சாா்பில் நாட்டின் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் கரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றியவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.  திருவண்ணாமலை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பட்டியலில் முதலாவதாக, பாரத சாரண இயக்க திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் பெயர் இடம்பெற்றிருந்தது. நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கோவிட்-19 தடுப்பு பணியில் பொது மக்களுக்கும் மற்றும் ஏழை எளியவர்களுக்கும் சார்பாக பணி செய்தமைக்கான சேவையை பாராட்டி நினைவுப் பரிசும், சான்றிதழும் திருவண்ணாமலை மண்டல ஒருங்கிணைப்பாளர் பியூலா கரோலின் மாவட்ட ஆட்சியர் வழங்கி கௌரவித்தார். நிகழ்வின்போது மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அரவிந்த், துணை ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் அருட்செல்வம், மாவட்ட கல்வி அலுவர் ராஜேந்திரன், பள்ளி ஆய்வாளர் குமார் ,மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

செய்தியாளர் செங்கம் சரவணகுமார்