Home செய்திகள் செங்கக்தில் பெய்த கனமழையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி.

செங்கக்தில் பெய்த கனமழையால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்ததால் சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு குப்பனத்தம் செய்யாற்றில் குப்பனத்தம் அணை கட்டப்பட்டது அணை கட்டபட்டதால் மழைக்காலங்களில் ஜமுனாமத்தூர் அடிவாரத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சுமார் 70 க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு விவசாயத்திற்கு ஆதாரமாக தண்ணீர் செல்லும் ஆனால் குப்பநத்தம் அணை கட்டப்பட்டதால் செய்யாற்றில் வெள்ளபெருக்கு ஏற்படாமல் அணையில் நீர் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் குப்பநத்தம் அணைக்கு முன்பு உள்ள துருஞ்சிகுப்பம் பகுதி மலை மேலே உள்ள நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் என்பதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் செய்யாறில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்கள் முழுவதும் தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஏரிகளுக்கு நீர்வரத்து செல்வதற்கு மிகுந்த சிரமமாக இருந்ததால் அதனை முழுமையாக அகற்றி ஏரிகளுக்கு தண்ணீர்கள் செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொது மக்களும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com