திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி ஆசிரியர் பியூலா கரோலின் என்பவர் சமூகப் போராளி விருது பெற்றுள்ளார்.இவர் டேனிஷ் மிஷன் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகவும் பாரத சாரண இயக்கத்தின் தேசிய பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.கரானா இரண்டாம் அலை தாக்கத்தில் மனமுடைந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் ஊக்கப்படுத்தும் விதமாக பசுமை வாசல் பவுண்டேசன் சார்பில் பதினோரு பிரிவுகளில் நடத்திய கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் சமூக சேவகர் பிரிவுகளில் பங்கு பெற்ற சிறந்த சமூக போராளி விருது பெற்று அசத்தி வருகிறார்.இவர் மாவட்ட அளவிலும் தேசிய அளவிலும் பல விருதுகளைப் பெற்றுள்ளார். முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் நல்லாசிரியர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது என்று பெருமையோடு கூறுகிறார். சேவையைப் பாராட்டி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி சமூக சேவைக்கான விருது வழங்கியுள்ளார்.சேவா ரத்னா விருது, சாதனை செம்மல் விருது, சிறந்த பெண்மணி காண விருது, சமூக சேவைக்கான விருது சமூக போராளி விருது என பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரது திறமையும் சேவையும் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்
46
previous post
You must be logged in to post a comment.