Home செய்திகள் தேசிய திறனறி தேர்வு: மேல் பெண்ணாத்தூர் பள்ளி சாதனை .

தேசிய திறனறி தேர்வு: மேல் பெண்ணாத்தூர் பள்ளி சாதனை .

by mohan

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வில், மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள், நான்கு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை எம்.எச்.ஆர்.டி., சார்பில், நாடு முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான வருவாய் வழி திறனறிவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்கின்றனர்.தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து, 9, 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான கல்வி உதவித்தொகையாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இதன்படி, நான்கு ஆண்டுகளுக்கு, 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாணவர்களின் வங்கிக்கணக்கில் இத்தொகை செலுத்தப்படும்.பள்ளிக் கல்வியை வறுமை உள்ளிட்ட காரணங்களால் இடையில் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக, இத்தொகை வழங்கப்படுகிறது.மாணவர்களின் நுண்ணறிவை பரிசோதிக்கும் வகையில், 90 மார்க், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, 90 மார்க் என மொத்தம், 180 மார்க் வழங்கப்படுகிறது.கடந்த, வருடம் டிச.,ல் தேர்வு நடைபெற்றது.திருவண்ணாமலை மாவட்ட அளவில், தேர்வு எழுதியவர்களில், 300 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். தேர்வில், மாவட்ட அளவில், செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் கவின் மூன்றாம் இடத்திலும், செங்கம் ஒன்றிய அளவில் முதலிடத்திலும் வெற்றி பெற்றான் . ஜானகிராமன் பிரதீப் முகிலரசன் ஆகிய 4 மாணவர்கள் திருச்சி பெற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றதை அடுத்து செங்கம் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி வட்டார கல்வி அலுவலர் சுப.கோவிந்தராஜ் , மேல் பெண்ணாத்தூர் தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி, பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு, மகேஸ்வரி, ராஜா , ஆறுமுகம் மற்றும் பெற்றவர்கள் மாணவர்களை பாராட்டினர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!