
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு ஊராட்சியில் புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மேல்பள்ளிப்பட்டு ஊராட்சியில் அன்னை சத்யா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜம்புலிங்கம் மற்றும் ஊராட்சி தலைவர் செல்வராஜ் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து விளையாட்டில் ஈடுபாடு உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கினார். விழாவில் மேல் பள்ளிப்பட்டு ஊராட்சி செயலர் , வார்டு உறுப்பினர்கள் அனைத்து பொது மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சி முடிவில் வார்டு கவுன்சிலர் நன்றி கூறினார்.
செங்கம் செய்தியாளர், சரவணகுமார்.
You must be logged in to post a comment.