Home செய்திகள் கொரோனா காலத்தில் மலைவாழ் மக்களுக்கு குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி மன்றத் தலைவர் – கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

கொரோனா காலத்தில் மலைவாழ் மக்களுக்கு குடிதண்ணீர் வழங்காத ஊராட்சி மன்றத் தலைவர் – கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், ஊர் கவுண்டனூர், குட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய பொதுமக்கள் கடந்த சில தினங்களாக ஊரிலேயே தங்கி இருப்பதால் அதிக அளவில் குடிநீர் தேவைப்படும் நிலையில் அவர்களுக்கு குடிநீர் வழங்காமல் நான்கு நாட்களுக்கு மேலாக நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றும் அறையை பூட்டு போட்டு சாவியை ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் எடுத்து சென்றுள்ளார்.இதனால் 4 நாட்களாக குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது எனக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்காத உங்களுக்கு எவ்வித சலுகையும் அதாவது குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்த முடியாது என்றும் நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று புகார் அளிக்கலாம் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறி தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக ஊர்கவுண்டனூர், குட்டூர் உள்ளிட்ட பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் ஜே ஜே எம் திட்டத்தின் கீழ் சுமார் 36 லட்சம் மதிப்பில் கிராமங்களுக்கு புதிய குழாய்கள் அமைத்து மேல்நிலைத் தொட்டி அமைத்தும் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்க தமிழக அரசு நிதி வழங்கியுள்ளது. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் அவருக்கு வாக்களிக்காத கிராம மக்களுக்கு அத்திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் மற்றும் தெரு விளக்குகள் அமைத்து தர முடியாது என்றும் கூறி மறுத்து வருகிறார். மேலும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வீடு வீடாக சென்று புதியதாக பைப்லைன் இனைத்து குடிநீர் வழங்க வேண்டும்.

ஆனால் ஏற்கனவே உள்ள பழைய குடிநீர் குழாயில் ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டின் உரிமையாளர்களிடம் தங்களது வீட்டிற்கு குடி நீர்குழாய் வேண்டுமென்றால் தாங்களே அதற்கான குழிதோண்டி வேலை செய்ய வேண்டும் என்று கூறி அனைவரிடமும் வேலை வாங்கி வருகிறார்.மேலும் அரசு ஒதுக்கிய அந்த நிதியிலிருந்து செலவு செய்யாமல் டேங்க் ஆபரேட்டர்களை மிரட்டி வேலை வாங்கி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் இந்த அராஜக போக்கை கண்டித்து அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு மருத்துவ பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் குடிதண்ணீர் கூட வழங்க முடியாத ஊராட்சி மன்றத் தலைவரால் மக்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.இதனை கருத்தில்கொண்டு மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் அனைத்து மலை கிராம மக்களுக்கும் குடிநீர் மற்றும் தெருவிளக்கு சரிசெய்ய ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவிடவும் , அதிகார துஷ்பிரயோகத்தை கட்டவிழ்த்து விட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் மலைகிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களுக்கு கோரிக்கை வைக்கின்றோம் என்று கூறினார்கள்.மேலும் ஊராட்சி மன்ற தலைவர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் ஏழரை லட்சம் மதிப்பில் அரசாங்க பணத்தை எடுத்து தனக்கான தனி கிணறு ஒன்று அமைத்துக்கொண்டு தற்போது அது விசாரணையில் உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடக்காமல் மக்களுக்கு சேர வேண்டிய உரிய அரசு சலுகைகள் முறையாக கிடைக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!