Home செய்திகள் தொரப்பாடி பகுதியில் எருது விடும் விழா -வெற்றிபெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு.

தொரப்பாடி பகுதியில் எருது விடும் விழா -வெற்றிபெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு.

by mohan

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடி பகுதியில் மாசி மாதத்தையொட்டி இரண்டாம் ஆண்டு எருது விடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்தப் போட்டியில் திருவண்ணாமலை திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்று தங்களது இலக்குகளை நோக்கி சீறிப் பாய்ந்தது குறுகிய வினாடிக்குள் ஓடிய காளைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து ரூபாய் 35 ஆயிரம் ரொக்கம் முதல் பீரோ எல்இடி டிவி சைக்கிள் மின்சார அடுப்பு மிக்ஸி டேபிள் ஃபேன் வாட்டர் ஹீட்டர் பித்தளை தவளை உள்ளிட்ட 45 பரிசு பொருட்களை முந்திச் சென்று வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் செங்கம் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சீறிப்பாயும் காளைகளை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தனர் இந்நிகழ்ச்சியில் தங்களது இலக்குகளை நோக்கி சீறிப் பாயும் காளைகளை வேகத்தை குறைப்பதற்காக காளைகள் சீறிப்பாயும் வாடிவாசல் முன்பு காளையர்கள் நின்று காளைகளை அடக்கி அதன் வேகங்களை கட்டுப்படுத்த முயன்ற காளையர்கள் காளை மாடுகள் முட்டி விட்டு முந்திச் செல்லும் போது சில காளையர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது இந்த எருது விடும் விழாவில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் மற்றும் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com