Home செய்திகள் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டல்;அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் மீது போலீசில் புகார்.

துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டல்;அதிமுக ஒன்றிய செயலாளர் வெள்ளையன் மீது போலீசில் புகார்.

by mohan

அதிமுக திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு மாவட்டம் எனவும் தெற்கு மாவட்டம் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மாவட்ட செயலாளராக உள்ளார். வடக்கு மாவட்டத்திற்கு தூசி கே மோகன் அவர்கள் மாவட்ட செயலாளராக உள்ளார். ஜமுனாமரத்தூர் ஊராட்சி ஒன்றியம் கட்சி அமைப்பு ரீதியாக கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடக்கு மாவட்ட பகுதியில் கோவிலூர், குட்டக்கரை, நிம்மியம்பட்டு, வீரப்பன் ஊர், கான மலை ஆகிய ஊராட்சிகளும் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட செங்கம் தொகுதியில் பலாமரத்தூர், மேல் சிலம்படி, புலியூர், தென்மலை அத்திப்பட்டு, கல்லாத்தூர், ஊர் கவுண்டனூர் ஆகிய ஊராட்சிகள் உள்ளது. ஒருங்கிணைந்த ஒன்றியமாக இருக்கும் பொழுதுகடந்த 35 ஆண்டுகளாக பெருங்கட்டூர் என் வெள்ளையன் என்பவரே ஒன்றிய கழக செயலாளராக இருந்துள்ளார். இதனால், கட்சி வளர்ச்சி அடையாமல் மலைவாழ் மக்கள் மத்தியில் வெள்ளையனுக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுந்தது. இவர் மீது திமுக நிர்வாகிகளுடன்தொடர்பு என குற்றச்சாட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதனால்கட்சி நிர்வாகிகள் கட்சி வளர வேண்டுமென்றால் வெள்ளையனை நீக்கிவிட்டு வடக்கு தெற்கு என இரண்டு ஒன்றியங்கள் ஆக பிரித்து புதியவர்களை நியமிக்க கோரி கட்சித் தலைமைக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், வெள்ளையன் அவர்கள் ஒன்றியத்தை பிரிக்கக் கூடாது என எம்எல்ஏ,அமைச்சர் முதல் கட்சித் தலைமைவரை புகார் அளித்து வந்ததோடு நில்லாமல் பிரிக்க கோருபவர்களின் மீது அவ்வப்போது காவல் நிலையங்களில் புகார் அளிப் பதும் மிரட்டும் விதமாக இருந்தார். அதையும் மீறி செங்கம் தொகுதிக்குட்பட்டகழக நிர்வாகிகள் கல்லாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கிளையூர் எம் சி அசோக் அவர்கள் தலைமையில் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி கட்சி வளர்ச்சிக்காக தொடர்ந்து ஒன்றியத்தை பிரிக்க போராடி வந்தனர்.. அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டஆறு ஊராட்சிகளுக்கு ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழகம் என பிரித்து மாவட்ட செயலாளர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பரிந்துரையின் பேரில் பெரும்பான்மை நிர்வாகிகளின் கோரிக்கையின்படி கிளையூர் எம் சி அசோக் அவர்களை ஒன்றிய கழக செயலாளராக கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டார்.அதுமுதல் ஒன்றியத்தை பிரிக்கக் கூடாது என ஒன்றிய செயலாளர் என் வெள்ளையன் அவர்கள் வடக்கு மாவட்ட பகுதியில் இருந்து கொண்டு மலைஜாதி அல்லாத அசோக் அவர்களை நியமித்ததுதவறு எனவும் ஒன்றியத்தை பிரித்தது தவறு எனவும் மாவட்ட செயலாளர் பணம் பெற்றுக் கொண்டு பதவி அளித்து விட்டார் என சமூக வலைதளங்களில் தன்னுடைய ஆதரவாளர்பரப்புரை செய்தார். கட்சித் தலைமை அலுவலகம் சென்று புகார் அளித்தார். இதில் குறிப்பாக இதில் குறிப்பாக கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்த புலியூர் கோவிந்தராஜ், பண்டி ரேவ் கோவிந்தராஜ், பலா மரத்தூர் விஜயன், சமீபத்தில் கட்சியில் இணைந்த கேசவன், வெள்ளையனின் உறவினர் மேல் சிலம்படி சங்கர், கவுன்சிலராக வெற்றி பெற்று உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளித்த பெரு முட்டம்காளி, உள்ளிட்டோர் கள் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவுடன் ஜமுனாமரத்தூர் காவல் நிலையங்களிலும் புகார்களை அளித்த வண்ணம் இருந்தனர். அத்துடன் அசோக் தலைமையிலான நிர்வாகிகளை செயல்பட விடாமல் பிரச்சனைகளை செய்து உள்ளனர். கூட்டம் நடத்தினால் தடுப்போம், மேடை போட்டால் எரிப்போம் மாவட்ட செயலாளரும் ஒன்றிய செயலாளரும் எங்கள் பகுதிக்கு வரக் கூடாது எனவும் மிரட்டி உள்ளனர். அத்துடன் காலை கையை வெட்டுவோம் எனவும் மீறினால் துப்பாக்கியால் சுடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்பு இருந்தும் அதில் இருந்து தன் பதவியை பயன்படுத்தி தப்பித்து வந்ததால் என் வெள்ளையன் அவர்கள் இது போன்ற செயல்களை இப்பகுதியில் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது. வெள்ளையன் தரப்பினருக்கு பொதுமக்கள் மத்தியிலும் கட்சியினர் மத்தியிலும் செல்வாக்கு இல்லை என்பதை அறிந்து மிரட்டல் போக்கை கடைபிடித்து ஜாதி ரீதியான கோசத்தை முன்வைத்து பிரச்சினை செய்தால் கட்சித் தலைமை அசோக்கை நீக்கும் என எதிர்பார்க்கின்றனர் எம் சி அசோக் அவர்கள் கல்லாத்தூர் ஊராட்சி மன்றத்தின் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், சமூக சேவகர், முன்னாள் ஜவ்வாதுமலை ஊராட்சி மன்ற தலைவரின் கூட்டமைப்பு தலைவர்முன்னாள் ஜனாதிபதி மேதகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் விருது பெற்றுள்ளார், இவரது மனைவியும் 5 ஆண்டுகள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். அப்போது தீண்டாமை மற்றும் மத நல்லிணக்கத்தை கடைப்பிடித்து இதற்கான ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளார். மக்களிடத்திலும்கட்சி தொண்டர்கள் இடத்திலும் நன்மதிப்பைப் பெற்று உள்ளார் இவரது மூத்த மகனுக்கு பழங்குடியினத்தைசேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். எனவே, இவரது வளர்ச்சி வெள்ளையனுக்கு ம், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் ஏற்க முடியாததாக உள்ளதால் திராவிட முன்னேற்றக் கழகத்தி ன ரோடு இணைந்து வெள்ளையன் பல்வேறு சம்பவங்களை நடத்தியதால் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். குறிப்பாக நான்கு தினங்களுக்கு முன்பாக ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் வெள்ளையன் தலைமையிலான குழுவினர் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய பகுதிக்குள் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ஒன்றிய செயலாளரும் உள்ளே நுழையக்கூடாது. கட்சிக் கூட்டங்களை நடத்த கூடாது மேடை அமைக்க கூடாது. அப்படி மீறி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று மனு அளித்துள்ளார். இதனால் கொதித்தெழுந்த மலைவாழ் மக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ் அற்புதம், ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் மோலயனூர் வெள்ளையன் தலைமையில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அரவிந்த் அவர்களிடம் என் வெள்ளையன் உள்ளிட்ட அவர்களின் கூட்டாளிகள் மீது புகார் அளித்தனர். புகாரில் கட்சிக் கூட்டம் நடத்தினால் கொடியையும் மேடையும் கொளுத்துவோம் என்று மிரட்டுகின்றனர், கையைக் காலை வெட்டுவோம் என்று மிரட்டுகின்றனர், துப்பாக்கியால் சுடுவோம் என மிரட்டுகின்றனர், ஜாதி பெயரைச் சொல்லி வன்முறையை தூண்ட முயல்கின்றனர் எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரியிருந்தனர். குறிப்பாக வெள்ளையன் அவர்கள் பல்வேறு குற்ற நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். முப்பத்தைந்து ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒருவரே தொடர்ந்து ஒன்றிய செயலாளராக இருப்பது என்பது ஜனநாயக நடவடிக்கை என்பது கேள்விக்குறியாக உள்ளது. கட்சியும் ஆட்சியும் தவறாக பயன்படுத்துபவர்கலையும் கட்சி நிர்வாகம் கவனிக்க வேண்டும். குறிப்பாக சிறிய ஒன்றியம் ஆக இருந்தாலும் பரப்பளவில் பெரிய ஒன்றியமாக உள்ள இப்பகுதி அடிப்படை வசதிகளை இன்னுமும் பூர்த்தி அடையாமல் உள்ள பகுதியாகவே உள்ளது. மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிளை யூர் எம் சி அசோக் அவர்களும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com