Home செய்திகள்உலக செய்திகள் “சீதக்காதி” பட தலைப்பை மாற்ற கோரிய பொது நல வழக்கும்.. கடந்து வந்த பாதையும்.. ஒரு பார்வை…

“சீதக்காதி” பட தலைப்பை மாற்ற கோரிய பொது நல வழக்கும்.. கடந்து வந்த பாதையும்.. ஒரு பார்வை…

by ஆசிரியர்

சீதக்காதி” என்ற தமிழ் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியான பொழுது அதன் தலைப்பை மாற்றக் கோரி கீழக்கரையைச் சார்ந்த வழக்கறிஞர் AMD.முஹம்மது சாலிஹ் ஹுசைன் என்பவரால் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி பொது நல வழக்கு சென்னை நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.  வழக்கின் சாராம்சமே தெளிவாக தலைப்பை மாற்றக் கோரியது தானே தவிர படத்தை தடை செய்ய கோரவில்லைஆனால் அதையும் மீறி தவறான பிரச்சாரங்கள் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

படத் தலைப்புக்கு தடை கோரியதற்கான காரணம், சீதக்காதி என்பவர் செத்தும் கொடை கொடுத்தரர் என்று சரித்திரத்தில் இடம் பெற்ற கீழக்கரையைச் சார்ந்த செய்யது அப்துல் காதிர் என வள்ளலாக திகழ்ந்தவர்.  அவர் வள்ளல் குணத்திற்காகவே “வள்ளல் சீதக்காதி” என்று அழைக்கப்பட்டவர்மேலும் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் அரசவையில் மந்திரியாக பணியாற்றிவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் பொது நல வழக்கின் முக்கியத்துவம் என்னவெனில்,  பொது நல வழக்கும் எனும் பட்சத்தில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் அனைவராலும் மிகவும் உன்னிப்பாக கவனித்து பார்க்க கூடிய வழக்காகும்.  பொது நல வழக்கை மிகச் சாதாரணமாக யாரும் தொடுத்து விட முடியாது.  காரணம் பொது நல வழக்கு இரண்டு நபர் அமர்வினால் விசாரிக்கப்படும்.  இதில் நீதிபதியாக இருக்கும் ஒரு நபருக்கு வழக்கு தொடர்ந்தவரின் உள்நோக்கத்தில் சந்தேகமோ, தனி நபர் விளம்பரத்திற்காக தொடரப்பட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அவ்வழக்கை உடனடியாக தள்ளுபடி செய்து குறைந்த பட்ச அபராதமாக ரூபாய் ஐம்பதாயிரம் வரை அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது.

ஆகையால் இந்த படத் தலைப்பை மாற்றுவதற்கான பொது நல வழக்கு தொடரும் முன், பல அடிப்டையான முன் நடவடிக்கைகள் எடுத்துமக்கள் மத்தியில் சீதக்காதியின் பட தலைப்பை மாற்றக் கோருவதின் நோக்கம் என்ன என்பதை பல கட்டங்களில் தெளிவுபடுத்தப்பட்டது.  ஆரம்பமாக ஃபிப்ரவரி 13, 2018 மற்றும் ஃபிப்ரவரி 21, 2018 ஆகிய நாட்களில் கீழக்கரையில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு கீழை நியூஸ் வலைதளம் மற்றும் யூட்யூப் சேனல்களில் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் கோவையில் இருந்து வெளியாகும் நியூஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் அரசியல் ஆத்மா பத்திரிக்ககையில் நவம்பர்2018ல் வெளியிடப்பட்டது.  இதற்கு முன்னதாக முக்கிய பிரமுகர்கள் மூலமாகவும் ஈமெயில் மூலமாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகருக்கு கீழக்கரை மக்களின் எண்ணங்களை தெளிவுபடுத்த முயற்சி எடுக்கப்பட்டது.  ஆனால் எதற்கும் பலன் எட்டாத நிலையிலேயே டிசம்பர் மாதம் பொது நல வழக்கு கீழக்கரை வழக்கறிஞர் சாலிஹ் ஹுசைனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.  பின்னர் டிசம்பர் 22, 2018 அன்று வழக்கின் நோக்கம் பற்றியும், தன்மை பற்றியும் கீழை நியூஸ் வலைதளம் மற்று யூட்யூப் சேனல் மூலமாக விளக்கம் கொடுக்கப்பட்டது.

பின்னர் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.  இந்நிலையில் படம் வெளியானதை தொடர்ந்து நீதிபதிகள் படம் தொடங்குவதற்கு முன்பாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே தவிர, யாரையும் குறிப்பிடுபவை அல்ல..” என்பதை குறிப்பிட்டு திரையிட வேண்டும் மற்றும் அதற்கான சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.  இந்நிலையே இவ்வழக்கிற்கு பெரும் வெற்றி என கூறலாம்.

பின்னர் இறுதி தீர்ப்பு விசாரனைக்கு வந்த பொழுது நீதிபதிகள் பல அவசியமான அறிவுரைகளை சினிமா துறையினருக்கு வழங்கியதுடன், பொது நல வழக்கு தொடர்ந்தவருக்கு எவ்விதமான செலவினங்களும் இல்லாத வகையில் வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைத்தனர்.  தீர்ப்பில் குறிப்பிட்ட சில அறிவுரைகள் உங்கள் பார்வைக்கு,

– “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே தவிர, யாரையும் குறிப்பிடுபவை அல்ல..” என்பதை குறிப்பிட வேண்டும்.

எதிர் மனுதாரர் இப்படம் வள்ளல் சீதக்காதியை படத்தில் குறிப்பிடவில்லை மற்றும் கதையும் அவரை பற்றியது இல்லையென்று உறுதி பட கூறியதாலும்,  படமும் ஏற்கனவே திரையிட்டு சில நாட்களே ஓடிய காரணத்தினால், வரக்கூடிய காலங்களில் திரைப்பட தயாரிப்பாளர்களும் இது போன்ற விசயங்களில் பொதுமக்களின் மன நிலை அறிந்து செயல்பட வேண்டும்.

சட்டரீதியாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், இந்த வழக்கு மூலம் இனி வரும் காலங்களில் சமூகத்திற்கும்சமுதாய நலனுக்காக பாடுபட்டவர்களின் பெயரை வைத்து சினிமா எடுப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்தது என்றால் மிகையாகாது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com