சிறுநாயக்கன் பட்டியில் பள்ளிசீர் வழங்கும் விழா..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சிறு நாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி பொதுமக்கள் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தேவையான பீரோ, குடம், சேர், றும் எழுதுபொருட்கள் பல்வேறு பொருட்கள் பொதுமக்கள் சார்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தேவராட்டம், மேளதாளம் முழங்க சிறு நாயக்கன்பட்டியில் உள்ள அனைத்து வீதிகளிலும் பேரணி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் ஜோசப் தலைமை தாங்கினார் . நிலக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் ஆனந்தம், ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். கிராம முக்கியஸ்தர்கள வீரய்யா சாமி, பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பொதுமக்கள் சார்பாக சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் கல்விச் சீர் பள்ளிக்கு வழங்கப்பட்டது. படவிளக்கம் :சிறு நாயக்கன்பட்டி நடுநிலைப் பள்ளிக்கு பொதுமக்கள் சார்பாக கல்வி சீர் வழங்கும் விழா மேளதாளம் முழங்க நடைபெற்ற போது எடுத்த படம்.