Home செய்திகள் மதுரை – சிறுவன் உட்பட ஐந்து பேரை வெட்டிய வழக்கில் காயம் பட்டவர்களுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திலிருந்து உதவித்தொகை.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு

மதுரை – சிறுவன் உட்பட ஐந்து பேரை வெட்டிய வழக்கில் காயம் பட்டவர்களுக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்திலிருந்து உதவித்தொகை.தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் நேரில் ஆய்வு

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த பெருங்குடியில் கடந்த வாரம் அந்தப் பகுதியை சேர்ந்த கணபதி (28), விஜய் குட்டி (25), அஜித் (24) (உட்பட ஐந்து பேர் ஊருக்குள் உள்ள நாடக மேடை அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது அங்கு வந்த இருவர் அஜித் என்பவரிடம் கண்ணா எங்கிருக்கிறான் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் தெரியாது என்று கூறவே திடீரென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை வெட்டத் தொடங்கியுள்ளார்,மேலும் அந்த பக்கம் வந்த பெரியசாமி(54) மற்றும் அவரது பேரன் ஆறு வயது சிறுவன் சர்வினையும் வெட்டிய விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.ந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.வந்த இருவர் யார், அவர்கள் விசாரித்த கண்ணன் என்பவர் யார், ஜாதி பிரச்சனை காரணமா, அவர்களுக்குள் எதுவும் முன் பகையா, இல்லை வந்தவர்கள் எதுவும் போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சார்பாக காயமடைந்தவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணையை இயக்குனர் ரவிவர்மன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காயப்பட்டவர்கள் மற்றும் அவர் குடும்பத்தினரிடன் விவரங்களை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து முதலில் பெரிய காயம் அடைந்தவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு 65 ஆயிரம் ரூபாயும் தரப்படும் என்றும் அதை தொடர்ந்து வழக்கு முடிவில் மொத்தம் ஐந்து லட்சம் ரூபாய் வரை தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மனிடம் வெட்டுப்பட்ட சிறுவனின் தாய்க்கு அரசு வேலை வழங்கும்படியும் அதுமட்டுமில்லாமல் தங்கள் பகுதியில் உள்ள மற்ற குறைகளையும் முறையிட்டதை அடுத்து இயக்குனர் ரவிவர்மன் மதுரை தெற்கு தாசில்தாரி முத்துபாண்டியிடம் உடனடியாக அவர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com