சென்னை- நகைக் கடை உரிமையாளர் வீட்டில் திருட்டு..

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் நகைக்கடை உரிமையாளர் சந்தோஷ் என்பவர், செளகார்பேட்டையில், நகை மொத்த விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 11 கிலோ தங்க நகை மற்றும் 140 கிலோ வெள்ளி, ஒன்றரை லட்சம் ரொக்கம் ஆகியவை திங்கட்கிழமை கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், 5 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் அடங்கி ஹார்ட்டிஸ்கையும், கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை காவல் இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான தனிப்படை போலீசார், விஜயவாடா ரயில் நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை பிற்பகலில், மூன்று கொள்ளையர்களை கைது செய்தனர். விஜயவாடாவை சொந்த ஊராக கொண்ட அவர்கள் மூன்று பேரும், சந்தோசிடம் வேலைபார்த்து வந்தது தெரியவந்துள்ளது. ஹன்ஸ்ராஜ் என்பவன் உட்பட 3 கொள்ளையர்களிடம் இருந்து 11 கிலோ தங்க நகைகள், 140 கிலோ வெள்ளியை, போலீசார் மீட்டனர்.

செய்தி:- ஃபக்ருதீன், திண்டுக்கல்