Home செய்திகள்கீழக்கரை செய்திகள் ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழா இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..

ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழா இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..

by ஆசிரியர்

ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பிப்.6 ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கியது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற இப்பேரணி இன்று (15/02/2020) காலை ராமேஸ்வரத்தில் மீண்டும் தொடங்கியது. ராமேஸ்வரம் தாசில்தார் ஜப்பார் தொடங்கி வைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ், ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக் லாண்ட் மதுரம், பங்கு தங்தை தேவசகாயம், ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்கள் எம்.ரமேஷ் (ராமநாதபுரம்), எம்.பாலமுருகன் (மண்டபம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாம்பன் பாலம் வழியாக ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வரவேற்று, மீண்டும் கொடியசைத்து தொடங்கி வழியனுப்பினார். ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் சேர்மன் எஸ்.ஹாரூண், துணைத்தலைவர் அஸ்மா பாக் அன்வர்தீன், மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் குழந்தைச் சாமி, தூத்துக்குடி மாவட்ட ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வன்னியராஜன்,  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன், தலைமை ஆசிரியை ஞான லெட்,  ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்கள் எம்.ரமேஷ் (ராமநாதபுரம்), அலெக்ஸ் (பரமக்குடி), எம்.பாலமுருகன் (மண்டபம்), இணை கன்வீனர் சத்குரு (ராமநாதபுரம்), நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ராஜன், சமூக ஆர்வலர் சுப.மங்களநாத சேதுபதி மற்றும் பெண் கவுன்சலர்கள் 100 பேர், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலை மற்றும் மெட்ரிக்., பள்ளி, புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டிடி விநாயகர் மேல்நிலைப்பள்ளி, வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்க உயர்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேர்க்கோடு செயின்ட் ஜோசப் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com