Home செய்திகள் தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு..

தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு..

by Askar

தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஆர் சி பி அணியினருக்கு, தோனி கை கொடுக்கவில்லை என்று ஒரு புகார் எழுந்தது.

ஆனால் உண்மை என்னவென்று தற்போது வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதனால் இதுதான் தோனிக்கு கடைசி ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த விரக்தியால் தான் தோனி சென்றதாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இது தொடர்பாக வெளியான வீடியோவில், தோனி வரிசையில் கை கொடுப்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஆர் சி பி வீரர்கள் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் கடுப்பான தோனி திடீரென்று ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு நோக்கி சென்றார்.

அப்போது அங்கு இருந்த ஆர்சிபி நிர்வாகி இருவரிடம் கை குலுக்கி விட்டு சென்று விட்டார். இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆர் சி பி அணியினர் தோனிக்கு அவமரியாதை செய்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நீங்கள் தோற்றால் கூட எதிரணியிடம் கை கொடுத்து விட்டு செல்ல வேண்டும்.

இதுதான் மரியாதை. இதன் மூலம் நமக்கு இருந்த பகை தற்போது முடிந்து விட்டது. போட்டியில் நாம் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக எதிர்கொண்டோம். ஆனால் போட்டி முடிந்து விட்டது. தற்போது நாம் கைகுலுக்கி செல்கின்றோம். இதுதான் அதன் அர்த்தம். இது எம் எஸ் தோனியின் கடைசி போட்டியாக இருந்திருந்தால், ஆர் சி பி வீரர்கள் ஒருவேளை தோனிக்கு மரியாதை கொடுத்து இருப்பார்கள்.

ஆனால் அது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் உடனடியாக ஆர்சிபி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்ததைவிட தோனி போன்ற ஒரு ஜாம்பவானின் கையை குலுக்க ஆர் சி பி வீரர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும். கையை கொடுத்துவிட்டு நீங்கள் கொண்டாடியிருக்கலாம். யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. ஒருவேளை நாளை காலை எழுந்து பார்க்கும் போது தோனி ஓய்வு பெற்று விட்டேன் என்று கூறினால் தோனிக்கு மரியாதை செலுத்த நாம் தவறி விட்டோமே என்று ஆர் சி பி வீரர்கள் கவலைப்பட கூடும். எனவே முதலில் கை கொடுத்துவிட்டு பிறகு கொண்டாடுங்கள் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com