
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியும், தோழியுமான சசிகலா நடராஜன் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அமமுக ., வினர் பட்டாசு வெடித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் உள்ள சசிகலா பூரண குணமாகி அரசியலில் மீண்டும் தொடர வேண்டி ராமநாதபுரம் அருகே குயவன்குடி சுப்பையா கோயிலில் அமமுக., சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. அமமுக ., பொதுச்செயலர் டிடிவி தினகரன் ஆலோசனையின் பேரில் அமைப்பு செயலர் ஜி.முனியசாமி குடும்பத்தினர் சார்பில் சுப்பையா கோயிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலர் ஜி.தனபாலன் (முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்), சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலர் கூரியூர் அஹமது இப்றாஹீம், பொறியாளர் அணி மாவட்ட தலைவர் ஜி.எம்.முரளி, மண்டபம் ஒன்றிய துணை செயலர் எம்.ஏ.பக்கர், ஒன்றிய செயலர்கள் ராமமூர்த்தி (திருப்புல்லாணி), சிவக்குமார் (நயினார்கோவில்), ராமநாதபுரம் நகர் செயலர் ரஞ்சித்குமார், ராமநாதபுரம் தகவல் தொழில் நுட்ப அணி நகர் செயலர் பாஸ்கரன், ஊராட்சி கிளை செயலர்கள் நிஜாம் (பனைக்குளம்), சிகாமணி (குயவன்குடி), மண்டபம் பேரூராட்சி சிறுபான்மை பிரிவு நகர் செயலர் பாரூக் அலி உள்பட பலர் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.