Home செய்திகள் தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

by mohan

ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடியைச்சேர்ந்த 36 மீனவர்கள், 5 படகுளை இலங்கை கடற்படை கடந்த 14 ஆம் தேதி சிறைபிடித்து சென்றது. இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டைபட்டினம் மீனவர்கள் 4 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.தமிழக மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவு பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கையில் மூழ்கிய தமிழக படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமகிருஷ்ணகுடில் சுவாமி பிரணவானந்தா தலைமை வகித்தார். தமிழ்நாடு மீனவர் சங்க மாநிலச் செயலர் என்.ஜே.போஸ், ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் என்.தேவதாஸ், செயலர் சேசுராஜ், மீனவன் மீனவர் சங்க தலைவர் எமரிட், மீனவர் சங்கத் தலைவர் மகத்துவம், பொறுப்பாளர் சகாயம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com