42
ராமநாதபுரம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குருசடை தீவு புரெவி புயலில் சிக்கி பாழானது. இதனால், இங்குள்ள பயணிகள் படகு சேதமாகி தண்ணீரில் மூழ்கியது. ஓங்கி சின்னம் கட்டடம் உடைந்து நொறுங்கியது.
10க்கும் மேற்பட்ட பூவரசு மரங்கள் சாய்ந்தன. ஐந்து மீ., அளவுக்கு மண்ணரிப்பு ஏற்பட்டது. மன்னார் வளைகுடா உயிர்கோள தேசிய காப்பகம் பகுதியான குருசடை தீவில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. மண்டபம் வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன், தேவகுமார் வனக்காப்பாளர் ஜான்சன், பிரபு, ராமின் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குருசடை தீவு பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.
You must be logged in to post a comment.