ராமேஸ்வரம் வழியாக ஊடுருவிய சிங்கள போலீஸ்காரர் சிக்கினார்

ராமேஸ்வரம் மெரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ்க்கு கிடைத்த தகவல்படி, தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முகுந்தராயர் சத்திரம் அருகே கம்பிபாடு கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றார். அவரை பிடித்த மெரைன் போலீசார் ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்தனர்.இலங்கை, மொனாராகல மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டார நாயக்க (30) என விசாரணையில் தெரிந்தது. விசாரணையில். இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுக போலீசில் 2018ல் பணியில் சேர்ந்து பணியாற்றி வருவதும் தெரிந்தது. இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சர்வதேச கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்தது தெரிந்தது. தமிழகத்திற்குள் ஊடுருவிய இவர் மீது மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுஷ்கோடி மெரைன் போலீசில் வைத்து விசாரித்தனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..