
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி இன்று (ஆக.20) எடுத்துக் கொண்டனர். முன்னாள் பிரதமர் மறைந்த ராஜிவ் காந்தி பிறந்த தினமான ஆகஸ்ட் 20-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சமுதாய நல்லிணக்க தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்தவகையில்மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில்,‘நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன். என்ற சமுதாய நல்லிணக்க நாள் உறுதிமொழியை அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.சிவகாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் எஸ்.மணிமாறன் உட்பட பலர் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.
You must be logged in to post a comment.