பாறை மீது மோதி கடலில் மூழ்கிய விசைப்படகு. தண்ணீரில் தத்தளித்த மீனவர்கள். ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் தருவை குளத்தில் இருந்து நேற்று இரவு விசைப்படகு ஒன்றில் முருகவேல், செல்வம், ராமு, சன்னாசி, தங்க ராஜ், சேகர், தர்மராஜ், மாடசாமி, சுபாஷ் உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்வதற்காக பாம்பன் தூக்கு பாலம் வழியாக நாகபட்டினம் சென்றனர். பாம்பன் பகுதியை நெருங்கியபோது பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 9 நாட்டிக்கல் மைல் தூரமுள்ள மணாலி தீவு அருகே சென்ற போது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பாறை மீது படகு மோதியது. இ தனால் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்த 10 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவர்கள் இந்திய கடற்படை முகாமிற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை தளத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் 4 மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் மீட்டனர். எஞ்சிய ஆறு மீனவர்களை சக மீனவர்கள் நாட்டுப்படகில் பத்திரமாக மீட்டு பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.இதனையடுத்து இந்திய கடலோர காவல் படை மருத்துவ குழுவினர் மீனவர்களுக்கு மருத்துவ முதலுதவி அளித்தனர். இதன் பின் மீனவர்களிடம் விசாரித்த, இந்திய கடலோர காவல் படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சேதமடைந்த படகு படகிலுள்ள மீன்பிடி சாதனங்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மீனவர்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்

உதவிக்கரம் நீட்டுங்கள்..