
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது.முன்னாள் தலைவர் எஸ்.ஏ. அபுதாகிர் லைமை தாங்கினார். தலைவர் எம்.ராஜேஸ்வரன், செயலாளர் ஆர்.பி.வெள்ளைச்சாமி, பொருளாளர் பி.சிவகுமார் ஆகியோருக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் சின்னதுரை அப்துல்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஏ.ரவிச்சந்திர ராமவன்னி, ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஜெ.தினேஷ் பாபு, உதவி ஆளுநர் கே.காந்தி , உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் வி.என்.நாகேஸ்வரன் ஆகியோர் பேசினர்.
புதிய உறுப்பினர்கள் 8 பேருக்கு ரோட்டரி முத்திரை வழங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜெ.சுகுமாறன், கோரல் சிட்டி ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் எஸ்.லோகநாதன், உச்சிப்புளி ரோட்டரி சங்க பட்டயச் செயலர் யு.ஆர்.கண்ணன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் கே.ஜெயபாலன், எஸ்.செந்தில்குமார், எஸ்.காமில் உசேன், முன்னாள் செயலர் எஸ்.பாலகிருஷ்ணன், டாக்டர் கே.தாமரை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.