Home செய்திகள் ராமநாதபுரத்தில் தினமும் 2,500 பேருக்கு திமுக சார்பில் உணவுப் பொருள் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தகவல்

ராமநாதபுரத்தில் தினமும் 2,500 பேருக்கு திமுக சார்பில் உணவுப் பொருள் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தகவல்

by mohan

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி) மாபிரதீப்குமாரிடம் , திமுக., மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மனு அளித்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் கொரானா வாழ்வாதார நிவாரணம் கேட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 9,200 அழைப்புகளில் 7, 200 பேரின் அழைப்புகளுக்கு தேடிச்சென்று மருந்து, மாத்திரை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கி உள்ளோம். முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடானை ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகளில் 72 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு வாழ்வாதார நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம் நகராட்சிகளில் தினமும் 2,500 பேருக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் 500 பேர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கியுள்ளோம். இலங்கை அகதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தோம் என்றார். மண்டபம் மேற்கு ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம், கமுதி போஸ், கருப்பையா, புகழேந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!