Home செய்திகள் புதியவர்கள் இணைவதால் இளைஞர் காங்., வலுப்பெற்று வருகிறது இளைஞர் காங்., தேசிய பொதுச் செயலாளர் ஆபிரஹாம் ராய் மணி பேட்டி

புதியவர்கள் இணைவதால் இளைஞர் காங்., வலுப்பெற்று வருகிறது இளைஞர் காங்., தேசிய பொதுச் செயலாளர் ஆபிரஹாம் ராய் மணி பேட்டி

by mohan

இராமநாதபுரம் இளைஞர் காங்கிரஸ் சார்பில் விழுதுகளை நோக்கி என்னும் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவண காந்தி தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். இளைஞர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் ஆபிரஹாம் ராய் மணி, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ரத்திஸ் கிருஷ்ணா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வி.வி.வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட தலைவர் பூவலிங்கம், இலக்கிய அணி முருகேசன், மாவட்ட மகளிரணி தலைவர் பெமீலா, எஸ்.சி., அணி நிர்வாகி துரை ராஜசேகர், இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர்கள் அலி பக்கர், பிரதாப், சட்டமன்ற இளைஞர் தலைவர்கள் ஜேம்ஸ் பாபு, சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வேலுச்சாமி, ராஜா, ராதா, நாசர் கான், ராஜிவ் காந்தி, கார்மேகம், சட்டமன்ற பொதுச் செயலாளர்கள் கலையரசன், மேகநாதன், கார்த்திகை சாமி, கார்த்திகை நாதன், ஆறுமுகம், அருண் பாண்டியன், சீனி முகமது, கலை பிரிவு அணி வலம்புரி, சேவா தள நிர்வாகி செல்வக்குமார், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி ஹாஜா நஜ்முதீன் உள்பட பலர் பங்கேற்றனர். வாலாந்தரவையில் இருந்து கெயில் (காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா) நிறுவனம் மூலம் தூத்துக்குடிக்கு குழாய்கள் மூலம் காஸ் கொண்டு செல்லப்படுவதால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் அத்திட்டத்தை அரசு கை விட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞர் காங்., தேசிய பொதுச் செயலாளர் ஆபிரஹாம் ராய் மணி கூறியதாவது: அகில இந்திய காங்., கமிட்டிக்கு தலைமை இல்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு மனசாட்சி படி தார்மீக பொறுப்பேற்று தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துள்ளார். அது அவரது ஆளுமை மிகுந்த பெருந்தன்மையை காட்டுகிறது. தலைமை இல்லாவிட்டாலும் கூட 134 ஆண்டுகள் பராம்பரியம் மிக்க காங்., கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எவ்வித நிர்பந்தமின்றி இளைஞர்கள் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். இதன் மூலம் இளைஞர் காங்கிரஸ் வலுப்பெற்று வருகிறது. உரிய நேரத்தில் சக்தி வாய்ந்த ஆளுமை மிக்க ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்று வழி நடத்துவார் என்றார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com