Home செய்திகள் ராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை வாலிபர் மீது வழக்கு

ராமேஸ்வரம் கோயில், ஏர்வாடி தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை வாலிபர் மீது வழக்கு

by mohan

தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக அவதூறு கருத்துகள், வழிபாட்டு தலங்களுக்கு மிரட்டல் விடுத்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண்94899 19722க்கு 76780 85855 என்ற எண் வாட்ஸ் அப் மூலம் கடந்த 4 நாட்களாக தகவல் பரவியது. . அதில் ஏர்வாடி தர்கா, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு மிரட்டல் தகவல் பரவியது. இது குறித்து சமூக ஊடக பிரிவு காவலர் கலைவாணன், போலீசில் 24.7.2020ல் புகார் அளித்தார். இதனடிப்படையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மேற்கு மும்பை மலாட் வளனை காலனி லோகநாதன் மகன் ராஜா ஹரிஜான் மீது 8 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!