Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுரையில் சமூக நல்லிணக்கத்தை குழைக்க நினைக்கும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க SDPI, PFI, TMMK, TNTJ, VCK, ஜமாத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

மதுரையில் சமூக நல்லிணக்கத்தை குழைக்க நினைக்கும் தீய சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க SDPI, PFI, TMMK, TNTJ, VCK, ஜமாத்தினர் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

by ஆசிரியர்

மதுரையில் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்துவரும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் மத மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் பாஜகவினர் தொடர்ந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் பகுதியில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தி வந்த பாஜக கும்பல் ஜனவரி-10- 2021 தாமரை பொங்கல் என்ற பெயரில் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள பள்ளிவாசல் தெரு வழியாக மேல தாளங்களுடன் சென்றும் வெடிகளை வெடித்தும் ஆபாச வார்த்தைகளால் கூச்சலிட்டும் செருப்புகள்,கற்கள் முதலானவற்றை பள்ளிவாசல் மீது தூக்கி எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனை கண்டித்து அப்பகுதி வாழ் பொதுமக்கள் ஜமாத்தினர்,எஸ்.டி.பி.ஐ கட்சி, தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட், டி.என்.டிஜே, திமுக மற்றும் விசிக ஆகிய கட்சித் தொண்டர்கள் ஒன்றிணைந்து வன்முறையில் ஈடுபட்டோரை கைது செய்ய வலியுறுத்தியும், மேற்கொண்டு பாஜக குண்டர்கள் பள்ளிவாசல் தெரு வழியாக செல்ல அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மமக, பாப்புலர் ஃப்ரண்ட் விசிக முதலான கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் பள்ளிவாசலை அவமதிக்கும் வகையில் நடந்த பாசிச குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி திருப்பாலை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதே தினத்தன்று பாஜக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு விசாரணை என்ற பெயரில் சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு மதுரை அண்ணாநகர் காவல்துறையினர் அப்பாவி தலித் மற்றும் இஸ்லாமிய இளைஞர்களை சட்ட விரோதமாக வீடுகளில் நுழைந்து வலுக்கட்டாயமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாநகர் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதில் அந்த இளைஞனின் இரண்டு காதுகளும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் இந்த அராஜகப் போக்கு ஏதோ மத்திய பாசிச பாஜக அரசிற்கு காவல்துறையினர் அடிபணிவது போன்று தோன்றுகிறது. ஜனநாயக ரீதியில் போராடிய இளைஞர்கள் மீது போடப்படும் பொய் வழக்கை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதே நேரத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை சீர்குலைக்க திருப்பாலை மசூதியில் கற்கள் மற்றும் செருப்பை வீசிய பாஜக குண்டர்களை கைது செய்யாமல் அப்பாவி இளைஞர்களை குறிவைத்து சட்டவிரோத கைது செய்துவரும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை, தமுமுக, மமக, திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசியலீக்,பாப்புலர் ஃப்ரண்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, எஸ்.டி.பி.ஐ தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு, ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், ஜாக், மஜ்லிஸ்கட்சி இந்திய தவ்ஹீத் ஜமாஅத், கூட்டமைப்பின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com