அமைச்சர் செல்லூர் ராஜூவை பதவி நீக்கம் செய்ய கோரி யாதவ மகா சபை ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

மதுரை அருகே மினி கிளினிக் திறப்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு யாதவ சமுதாய மக்களின் அறிவு திறன் குறித்து தவறாக பேசினார். 

அமைச்சரின் பேச்சிற்கு யாதவ சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன். இன்று (21.12.2020) ஆர்ப்பாட்டம் நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூவை பதவியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்க வேன்டும் என கோஷமிட்டனர். யாதவ மகா சபை நிர்வாகி ராமு, யாதவ மகா சபை சட்ட ஆலோசகர் அன்பு செழியன், மண்டபம் ஒன்றிய அதிமுக., முன்னாள் செயலர் லோகநாதன், ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் முனியசாமி, மாவட்ட கவுன்சிலர் கவிதா (கதிரேசன்) உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்பு செழியன் கூறியதாவது: யாதவ சமுதாய மக்களை தவறாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, யாதவ சமுதாய தலைவர்கள் முன்னிலையில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.