
விருதுநகர் அருகில் உள்ள பாலவனத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நூறு நாள் வேலையை முறையாக வழங்க கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாலவனநத்தம் ஊராட்சியில் நூறு நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி வழங்கிட வேண்டும், பாலவனநத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும், கூலி ரூ 256 தினசரி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100 மேற்பட்ட பெண்கள் பாலவனத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனார்.
இதை அடுத்து அங்கு வந்த மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ்ன் நடந்திய பேச்சுவர்த்தையில் இரு தினங்களுக்குள் சரி செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.