செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக கீழக்கரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இப்பேரணி கீழக்கரை காவல் நிலையம் துவங்கி கடற்கரையில் நிறைவு பெற்றது. இப்பேரணிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். கீழக்கரை வட்டாட்சியர் திருமதி. ராஜேஸ்வரி கொடியசைத்து துவக்கி வைத்தார். கீழக்கரை தேர்தல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் திரு. சேகு. ஜலாலுதின், வருவாய் ஆய்வாளர் திருமதி. சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆதிலெட்சுமி மற்றும் திரு. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில் மாணவ மாணவியர் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தியவாறும் கோடிமிட்டவாரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு வாசகங்களில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் பிழைதிருத்தம் குறித்த விபரங்களும் அடங்கியிருந்தன. இப்பேரணியின் நோக்கமானது 100ம% வாக்குப்பதிவு ஆகும். இப்பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை செஞ்சுருள் மற்றும் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.சுலைமான், திரு. ஏ. ராஜ மாணிக்கம் மற்றும் திருமதி. து. எஸ்தர் கண்மணி, ஆங்கிலத்துறை பேராசிரியர் திரு. ஆ. ராஜ திவாகர் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர், யூசுப் செயலர் சர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்திருந்தனர்.