Home செய்திகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு..

by ஆசிரியர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் பரிசு தொகை காசோலை, சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வாலிபால், கபடி, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து, பூப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் இரு பாலருக்கும் தனித்தனியே நடத்தப்படுகிநது. இப்போட்டிகளில் 1800 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். நேற்று நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசுத் தொகை காசோலை, சான்றிதழ் வழங்கினார்.

இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.ஆயிரம் இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு ரூ.750 மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ. 500 காசோலை வழங்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலன். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, முன்னாள் எம்.பி., நிறைகுளத்தான், ஹாக்கி பயிற்றுநர் தினேஷ் குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com