செங்கோட்டை – சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் இன்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் மதுரை ரயில் நிலையம் வந்தபோது என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை கண்ட பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் ரயில்வே போலீசார் என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் இச்சம்பவம் மதுரை கப்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் தற்கொலை செய்ய முயன்ற போது என்ஜினின் முன் பகுதியில் உடல் சிக்கி இருக்கலாம் என்றும் அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இச்சம்பவதால் பொதிகை ரெயிலானது 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உடல் நீக்கப்பட்டு பின்னர் ரெயில் புறப்பட்டு சென்றது.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.