கீழக்கரையில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு – அமைச்சர் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு…

2019ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் ரொக்க தொகை ₹.1,000/- என்ற தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று (06/01/2019) இராமநாதபுர மாவட்டம் கீழக்கரையில் 1ம் வார்டு மற்றும் 5வது வார்டில் உள்ள பொது வினியோக நிலையங்கள் மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் மணிகண்டன் மற்றும் இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தனர்.   மேலும் பொங்கல் பரிசு கடற்கரை ஐஸ் தொழிற்சாலை, குத்பா பள்ளி வாசல், சொக்கநாதர் கோயில், ஹமீதியா பள்ளி பகுதி, கும்பிடுமதுரை, குளபதம், காஞ்சிரங்குடி, தில்லையேந்தல், லட்சிமிபுரம், அளவாய்கரவாடி போன்ற பகுதிகளிலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

இவ்வனைத்து பகுதிகளிலும் சேர்த்து சுமார் 8676 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

செய்தி:- கார்த்தி, கீழக்கரை