164
ராஜபாளையத்தில் காவல் நிலையங்களில் சமத்துவ கொண்டாடினர்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் உள்ள வடக்கு காவல் நிலையம் தெற்கு காவல் நிலையம் போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என நான்கு இயங்கி வருகின்றது இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களும் சேர்ந்து காவல் பணிக்கு இடையே காக்கி சட்டை இன்று ஒரு நாள் விடுப்பு கொடுத்துவிட்டு வண்ண வண்ண கலர் கலர் ஆடைகள் அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்
இந்த சமத்துவ பொங்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா, வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் காவலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.