நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு எதிராக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரியிலும் உறுதிமொழி எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன் மேற்பார்வையில் போதைப்பொருள் தொடர்பாக மாவட்ட காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மாவட்ட காவல் துறையினர் சேர்ந்து போதை பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.