Home செய்திகள் பாலக்கோடு அருகே தண்டுகாரஹள்ளி ஊராட்சியில் பலலட்சம் ரூபாய் முறைகேடு. முதலமைச்சர் தனிபிரிவில் பெறப்பட்ட விளக்கத்தால் கிராமமக்கள் கொந்தளிப்பு ..மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டம்.

பாலக்கோடு அருகே தண்டுகாரஹள்ளி ஊராட்சியில் பலலட்சம் ரூபாய் முறைகேடு. முதலமைச்சர் தனிபிரிவில் பெறப்பட்ட விளக்கத்தால் கிராமமக்கள் கொந்தளிப்பு ..மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவிட்டால் போராட்டம்.

by mohan
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டுகாரனஹள்ளி ஊராட்சி தாசனஹள்ளி கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 20வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு கை பம்பும், மின்மோட்டார் இல்லாத 1500லிட்டர் கொள்ளவு கொண்ட இரண்டு சிண்டெக்ஸ்  உள்ளது.ஊராட்சியில் பல கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் பதித்து குடிநீர் விணியோகம் செய்து வரும் நிலையில் தாசனஹள்ளி கிராமத்திற்கு இதுவரை குடிநீர் குழாய் பதிக்கவில்லை. கிராம மக்கள் கை பம்பை பயன்படுத்தி வந்த நிலையில் கடந்த ஒருவருடங்களாக வறட்சியால் வறண்டு விட்டது.
ஆடு மாடு மற்றும் பொதுமக்கள் தங்கள் அடிப்படை தண்ணீர் பிரச்சினை சமாளிக்க கிராம மக்கள் 2கி.மீ தூரம் சென்று தண்ணீரை எடுத்து வருகின்றனர். அருகில் உள்ள ஊராட்சியில் சென்று தண்ணீர் கேட்டார் தரமறுப்பதாகவும், தகாத வர்தையால் திட்டுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.கிராமத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து ஊராட்சி செயலாளர் பவுன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் முதலமைச்சர் தனிபிரிவுக்கு விளக்கம் கேட்டு புகார் மனு தெரிவித்த நிலையில் தாசனஹள்ளி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஆழ்துளை கிணறு மற்றும் தெரு விளக்கு அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்க பட்டுள்ளது.
கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய இருவரும் இணைந்து செய்யாத ஒரு திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக அரசுக்கு பொய்யான தகவல்களை பதிவு செய்து பலலட்சம் ரூபாய் முறைகேடு செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் , தாசனஹள்ளி கிராமத்திற்கு ஒகேனக்கல் குடிநீர் குழாய் அமைத்து சீரான முறையில் குடிநீர் வழங்க வேண்டும் எனவும் தீர்வு கிடைக்கவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com