Home செய்திகள் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பது பற்றிய தொழில்நுட்ப பயிற்சி

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பது பற்றிய தொழில்நுட்ப பயிற்சி

by mohan
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார். வேளாண்மை நிலையத்தில் முக்கியத்துவம் மற்றும் அதை விவசாயிகள் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கி பேசினார். கால்நடை ஆராய்ச்சியாளர் நவீன நாட்டுக்கோழி வளர்ப்பு முறை சூழலுக்கு ஏற்ற கோழி இனங்கள் கோழிகளுக்கான மேலாண்மை குறித்து பயிற்சி அளித்தார். மேலும் கொட்டகை அமைப்பு தரமான கோழி குஞ்சுகளை உற்பத்தி செய்தல் நோய் மேலாண்மை சந்தைப்படுத்துதல் ஒருங்கிணைந்த பண்ணையில் நாட்டு கோழி வளர்ப்பின் முக்கியத்துவம் விலங்கின புரதத்தின் அவசியம் நாட்டுக்கோழி வளர்ப்புக்கான நவீன யுக்திகள் நாட்டுக்கோழி இனங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்  முடிவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கால்நடைத் துறை  அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com