இராமநாதபுரம், அக்.17- இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.242.85 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்துடன் கூடிய வாரச்சந்தை கட்டடம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் கனி முன்னிலை வகித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலம், கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையேற்று புதிதாக கட்டப்பட்ட வாரச்சந்தை வளாக கட்டடத்தை திறந்து வைத்தார். அவர் பேசுகையில், முதுகுளத்தூர் வளர்ந்து வரும் நகர் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. முதுகுளத்தூரை மையமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் முதுகுளத்தூர் வந்து செல்லும் அளவிற்கு மக்களின் தேவைகள் அதிகரித்து உள்ளது. விவசாயிகள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கும், அதே போல் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் உள்ளூரில கிடைத்திடும் வகையில் சந்தை வளாகம் முக்கிய தேவையான ஒன்றாக இருந்து வந்தன. இதைக் கருத்தில் கொண்டு முதுகுளத்தூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் கலைஞர் நகர்ப்புற மேர்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.242.85 லட்சம் மதிப்பீட்டில் 17 கடைகள், வாரச்சந்தை வளாகம் உள்ளடக்கிய புதிய கட்டடம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, முதுகுளத்தூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ஷாஜகான், துணைத் தலைவர் வயனப்பெருமாள், பேரூராட்சி செயல் அலுவலர் மாவதி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன், பேரூராட்சி இளநிலை பொறியாளர் இக்பால் உட்பட பலர் பங்கேற்றனர்.
47
You must be logged in to post a comment.