Home செய்திகள் மட்டப்பாதையில் மக்கள் தொடர்பு முகாமில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம வேண்டுகோள்

மட்டப்பாதையில் மக்கள் தொடர்பு முகாமில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம வேண்டுகோள்

by mohan

-திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள மட்டபாறை  கிராமத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் , நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் குழுத்தலைவர் யாகப்பன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் வரவேற்றுப் பேசினார்.. முகாமில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் தேன்மொழி சேகர் பேசியதாவது: தமிழக முதல்வர் தமிழகத்தில் தற்போது ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதாகவும், அரசின் மாதாந்திர உதவித்தொகை கிடைக்கவும் ஏராளமான வழிகளை ஏற்படுத்தியுள்ளார். இன்றைக்கு கிராமத்திற்கு சென்றாலும் அங்கிருக்கும் முதியவர்களும் ஏழை எளிய மக்களும் அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ஆன உதவித் தொகையை வேண்டி அதிகாரிகளிடம் மனு செய்தால் அலட்சியப் படுத்துவதாகவும, அதனை உரிய பரிசோதனை கூட செய்வதில்லை என பொதுமக்கள் என்னிடம் குறைகூறி வருகிறார்கள்..      ஆகவே அதிகாரிகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நலத்திட்ட உதவிகளை வழங்கி வர முடியும் இருப்பினும் மனு செய்யக்கூடிய தள்ளாத வயதில் இருக்கக்கூடிய நபர்களிடம் அன்போடு முறையாக அரசின் விதிகளை எடுத்துக்கூறி செய்யக்கூடிய உதவிகளைச் செய்ய வேண்டுமென இந்த கூட்டத்தின் வாயிலாக அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் வைக்கிறேன் , அதேசமயம் பொதுமக்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் தங்கள் சம்பளத்தை பொதுமக்கள் கேட்டு வரவில்லை அரசின் நலத்திட்ட உதவிகளையும் அரசு வழங்கக்கூடிய உதவிகளையும் வேண்டித்தான் அந்த தள்ளாத வயதிலும் ஏழை எளிய மக்கள் வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதிகாரிகள் கொஞ்சம் கனிவு காட்டுங்கள் என வேண்டுகோள் என பேசினார்.        இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு பேசியதாவது’: தமிழக அரசு எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கி வருகிறது அதனை முறையாக வழங்குவதற்காக அரசு அதிகாரிகளை அதிகாரிகள் மூலமாக செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக இன்றைக்கு அரசின் சலுகையாக விலையில்லா வீட்டு மனை பட்டா 22 பேருக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை 40 பேருக்கு ரூபாய் 4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், தோட்டக்கலை துறை சார்பாக கத்தரி நாத்து வெண்டை நாத்து சிப்பம் கட்டும் வரை உள்ளிட்ட வகைகளில் 7 பேருக்கு 4லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மை துறை சார்பில் கைத்தெளிப்பான் மற்றும் தார்ப்பாய் , தையல் இயந்திரம் உள்பட 8 நபர்களுக்கு 16 ஆயிரத்து 144 ரூபாய் மதிப்பிலும்’ ஆக மொத்தம் 15 லட்சம் 98 ஆயிரம் ரூபாய் 44 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம்.. இது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பல்வேறு விஷயங்களில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் உதாரணமாக இன்றைக்கு மிகப்பெரிய அளவில் மோசடி செய்யக் கூடிய வகையில் ஏடிஎம் கார்டு நம்பர் மற்றும் ஆதார் நம்பர் மற்றும் வங்கிக் கணக்கு நம்பர்களை வங்கி மேலாளர்கள் எனக்கூறி செல்போன் மூலமாக பேசி பொதுமக்களை ஏமாற்றி ஏழை எளிய மக்களின் பணத்தை வங்கியில் இருந்து மோசடியாக திருடி வருகிறார்கள்.          இதிலிருந்து நிச்சயமாக பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும் என்றால் பல்வேறு வகையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதைப்போன்றே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து குறையின்றி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.      இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின்  செய்தி பிரிவு இணை இயக்குனர் உமாபதி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் தண்டபாணி,நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், மட்டப்பாறை கூட்டுறவு சங்கத் தலைவர கமல பதி. ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் செந்தில்வேல், மண்டல துணை தாசில்தார்கள் டேனியல், ருக்குமணி, சரவணா வாசன், வருவாய் ஆய்வாளர் திருப்பதி கிராம நிர்வாக அலுவலர் செந்தில் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com