Home செய்திகள் புளியங்குடியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்.

புளியங்குடியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்.

by mohan

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபூபக்கர் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆ.துரை தலைமை தாங்கினார். வேட்பாளர் முஹம்மது அபூபக்கர் சிறப்புரை ஆற்றினார் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஷேக்காவூது, காங்கிரஸ் சார்பில் சட்டநாதன் பால்ராஜ், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தி.மு.இராஜேந்திரன், தேர்தல் பணி துணைச் செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் சி.பி.எம். மாவட்ட செயலாளர் உ. முத்துப்பாண்டியன் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இசக்கித்துரை, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் எஸ்.செய்யது சுலைமான், மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர்கள் டேனி அருள் சிங், ராஜ்குமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் யாக்கூப், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மு.முகைதீன், தமிழ் புலிகள் மாவட்ட தலைவர் சந்திரசேகர், பார்வாடு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன ஆதித் தமிழர் பேரவை மாவட்ட நிர்வாகிகள் கலிவருணன், சங்கை தென்னரசு மற்றும் பலர் கலந்து கொண்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் வருகின்ற 16-ஆம் தேதி மேலக் கடையநல்லூர் நாகம்மாள் திருமண மண்டபத்தில் காலை 9 மணியளவில் நடத்துவது எனவும், அன்று பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com