Home செய்திகள் தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு.

தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேச்சு.

by mohan

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரத்தில் புதிய தமிழக கட்சியின் சார்பாக தமிழக வளர்ச்சி அரசியல் மாவட்ட மாநாடு புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சௌந்தரராஜன் வரவேற்று பேசினார். மாநாட்டில் தலைமை ஏற்று புதிய தமிழக கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: கடந்த 30 ஆண்டு காலமாக தமிழகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் இன மக்களுக்காக புதிய தமிழகம் கட்சி தான் பல்வேறு போராட்டங்களின் வாயிலாக இன்றைக்கு மத்திய அரசும், மாநில அரசும் தமிழகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள் என ஒரே பிரிவின் கீழ் அழைக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு செய்யப்பட்டது வரவேற்கும் வகையில் இருந்தாலும், வெறும் பெயர் மாற்றம் மட்டுமே ஒரு சமுதாயத்தை  முன்னேறி செல்ல வழிவகுக்காது. வெறும் பெயர் மாற்றம் மட்டுமில்லாமல் தாழ்த்தப்பட்டவர் என்ற பட்டியலில் இருந்து வெளியேறுவது தான் சிறந்தது. எனவே தேவேந்திர குல வேளாளர்கள் இன மக்களை பட்டியிலிருந்து உடனடியாக மத்திய அரசும் மாநில அரசும் வெளியேற்ற வேண்டும். பட்டியலில் இருந்து வெளியேறினால் சலுகைகள் பறிபோகும் என வீண் பிரச்சாரத்தை மாற்று கட்சியினர் மக்கள் மத்தியில் பரப்பி வருவதை  ஏற்க முடியாது. இன்றைக்கு மத்திய அரசிலும் ,மாநில அரசிலும் அரசு வேலை வேண்டி தேவேந்திர குல வேளாளர் இன மக்களுக்கு இலவசமாக யாருக்காவது லஞ்சம் பெறாமல் வழங்கி இருக்கிறார்களா?அரசு வேலையில் சேர வேண்டுமென்றால் அது தேவேந்திரகுல வேளாளர் இன மக்களாக இருந்தாலும்  அங்கன்வாடி பணியாளர்கள் வேலைக்கு  5  லட்சம், அலுவலக உதவியாளர்கள் வேலைக்கு 10 லட்சமும் எந்த அரசு வேலையாக இருந்தாலும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை கிடைக்கும் தாழ்த்தப்பட்டோர் என்ற பட்டியலில் இருப்பவர்களுக்கு இலவசமாக வேலை வழங்கியதாக தமிழக வரலாற்றில் திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் நடந்ததாக சரித்திரமே இல்லை. எனவே தேவேந்திரகுல வேளாளர் இன மக்களுக்கு உரிய அந்தஸ்தும் , அதிகாரமும் கிடைக்க வேண்டும் என்றால் ஒரே வழி சமத்துவம் ஏற்பட தாழ்த்தப்பட்டவர் என்ற பட்டியலிலிருந்து நாமாக முன்வந்து வெளியேற வேண்டும், என்ற நிலைக்கு நாமே முன் வந்து விட்டோம் இதற்கு மத்திய அரசும் மாநில அரசும் செவிசாய்க்காமல் பட்டியலில் இருந்து வெளியேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாது பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும், இந்தக் கோரிக்கையை ஏதோ தேர்தல் வருகிறது அதற்காகவா சேகரிப்பதற்காக இந்த கோரிக்கை வைக்கவில்லை தேவேந்திரகுல குல வேளாளர் இன மக்களின் விடிவு காலத்திற்காக தான் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து பல்வேறு போராட்டத்தை நடத்தி வருகிறேன் என்று பேசினார். இதனைத் தொடர்ந்து நூத்து லாபுரம் ஊராட்சி சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர் கணேசன் தலைமையில் இளைஞர்கள் தமிழக அரசு எஸ். சி. எஸ். டி பட்டியல் இன மக்களுக்கு வழங்கியுள்ள தாட்கோ வங்கி கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை புதிய தமிழகம் சார்பாக வைக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார்கள். இந்த மாநாட்டில் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவநாதன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள்  கொங்கர்குளம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம் :புதிய தமிழக கட்சியின் நிறுவனரும், தலைவருமான கிருஷ்ணசாமியிடம் ஒன்றிய கவுன்சிலர் கணேசன் மனு கொடுத்த போது எடுத்த படம்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com