Home செய்திகள் நிலக்கோட்டை வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு தடுக்க திண்டுக்கல் கோட்டாச்சியா் நேரில் ஆய்வு. செய்தியாளர்களுக்கு தடை..

நிலக்கோட்டை வைகை ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு தடுக்க திண்டுக்கல் கோட்டாச்சியா் நேரில் ஆய்வு. செய்தியாளர்களுக்கு தடை..

by mohan

 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ரெங்கப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து ராமராஜபுரம் கிராமம் வரை சுமார் 30 கிலோ மீட்டர் வரை வைகை ஆற்றுப்படுகை செல்கிறது.     இந்த  ஆற்றில் பல ஆண்டு காலமாக மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதை பல்வேறு வகையில் அரசு அதிகாரிகள் தடுத்தும் எந்த விதத்திலும் அதை  முழுமையாக தடுக்க முடியவில்லை. மணல் திருட்டுதடுத்திட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கிறார்கள். இதுகுறித்து ராமராஜபுரத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவில் செல்லும் வைகை ஆற்று பகுதியில் மணல் திருடக்கூடாது என தடை உத்தரவு வாங்கியுள்ளார். இதன் எதிரொலியாக நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய்  கோட்டாட்சியர் உஷா தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு இடையே ஆலோசனைக் கூட்டம நடத்திினார்.   கூட்டத்தில் நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் விவசாயி களுக்கு இடையே பேசிய திண்டுக்கல்  வருவாய் கோட்டாட்சியர்  உஷா பேசியதாவது :நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தர்கள் நத்தம், ராமராஜபுரம், விளாம்பட்டி, பிள்ளையார்நத்தம் ,அணைப்பட்டி,   உள்ளிட்ட பகுதிகளில் மணல் மணல் திருட்டை தடுக்க ஒரு குழு அமைத்து அந்த குழுவின் மூலம் தக்க பாதுகாப்பு கொடுத்து மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் வைகையாற்று பகுதியைை ஆய்வு செய்ய கிளம்பினார் அப்போது ஆய்வு பற்றி செய்தி சேகரிக்கவும் ,படமெடுக்கவும் புறப்பட்ட செய்தியாளர்களை யாரும் வர வேண்டாம் என்று தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தடுத்து விட்டார் . இதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் வைகை ஆற்றுப்படுகையில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மூலமாக அமைக்கப்பட்டுள்ள கிணறுகளையும், அதேபோன்று மணல் திருடுவது எந்த வழியாக என அறிந்து அதன் குறித்த ஆய்வும்அதனைத் தொடர்ந்து அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டை தடுப்பது குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன், விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார்,, நிலக்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி, மண்டல துணை தாசில்தார் ருக்மணி, வருவாய் ஆய்வாளர்கள் சரவணமுத்து, ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாசில்தார் தடையால் செய்தியாளர்கள்படமெடுக்க முடியவில்லை. செய்திகள் மட்டும் பலரிடம் விசாரித்து வாங்க வேண்டி இருந்தது

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com