Home செய்திகள் அணைப்பட்டியில் ஆவின் பாலகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துவக்கம்

அணைப்பட்டியில் ஆவின் பாலகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று துவக்கம்

by mohan

தமிழகத்தில் நலிந்து கிடக்கும் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்தும் விதமாகவும், கிராமப்புறங்களில் ஆவின் பாலகம் திட்டத்தை கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 110 விதியின் கீழ் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் ஊராட்சி அணைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக ஆவின் பாலகம் விற்பனை நிலையம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கி விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: தற்போது தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட ஆவின் பாலக விற்பனை நிலையங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் துவங்க இருக்கிறோம். இதன்மூலமாக கிராமப்புறங்களில் ஆவின் பாலகம் பொருட்களை அதிகளவு விற்பனை செய்து மலிந்து கிடக்கும் கூட்டுறவு கடன் சங்கங்களை விரிவுபடுத்தவும், வேலைவாய்ப்பு அதிகப்படுத்தவும் இத்திட்டத்தை முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல் திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதுவும் கிராமத்தில் திட்டம் துவங்கப்பட்டது மிகுந்த அளவில் பொதுமக்களுக்கு பயனாக இருக்கும் என நம்புகிறோம் என பேசினார் . இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் முதல் நபராக ஆவின் பாலகம் பொருட்களை வாங்கினார். அணைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் காட்டு ராசா வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆவின் திட்ட அலுவலக பொதுமேலாளர் ராமநாதன், நிலக்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் சீனிவாசன், நிலக்கோட்டை கூட்டுறவு சங்க சார்பதிவாளர்கள் ரவிகுமார் , சாந்தி, சங்கச் செயலாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com