Home செய்திகள் நிலக்கோட்டையில் அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாய்களால் குடிநீர் வீணாகும் நிலை

நிலக்கோட்டையில் அடிக்கடி பழுதாகும் குடிநீர் குழாய்களால் குடிநீர் வீணாகும் நிலை

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. களுக்குத் தேவையான குடிநீர் நிலக்கோட்டை பேரூராட்சி மூலமாக ஆங்காங்கே ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு இருக்கிறது.    மேலும் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது நிலக்கோட்டை பகுதியில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காவிரி குடிநீர் திட்டம் இந்தக் கடுமையான குடிநீர் திட்டம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு பேருதவியாக இருக்கிறது. இந்தக் குழாய்கள் நேற்று நிலக்கோட்டை அணைப்பட்டி ரோட்டில் உள்ள காவிரி குடிநீர் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் உடைந்து தண்ணீர் சுமார் 4 மணி நேரம் வீணாகத் சாலையில் சென்றது.    தற்போது கொரானா வைரஸ் பாதிப்பால் தொடக்க நிலையில் எல்லோரும் வீட்டில் இருப்பதால் தண்ணீர் செலவு அதிகமாகும் நேரத்தில் எப்படி தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் நிலையை பார்த்து சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் இதுபோன்று அலட்சியமாக இருக்கும் பேரூராட்சி நிர்வாகத்தை உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com