Home செய்திகள் பொது சுகாதாரத்துறை சங்க கூட்டமைப்பின் சார்பில் நடந்த அவசர கூட்டம்;முக்கிய முடிவு..

பொது சுகாதாரத்துறை சங்க கூட்டமைப்பின் சார்பில் நடந்த அவசர கூட்டம்;முக்கிய முடிவு..

by mohan

தென்காசி மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணிபுரியும் மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சார்ந்த 13 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அவசர கூட்டம் தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மரு.திரு.ஜெஸ்லின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கம் சார்பில் மரு. சிவச்சந்திரன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் கங்காதரன், தமிழ்நாடு பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் சங்கம் சார்பில் கணேசன், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் நல சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ்நாடுஅரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ்நாடு சுகாதார கிராம செவிலியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புணர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், பல்நோக்கு மருத்துவமனை பனியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், MRB செவிலியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், VHN-SHN-CHN சங்கங்களின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தற்போது கொரோனா பெருந்தொற்று பரவி வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை களப்பணியில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி முகாமில் பிறத்துறைகளின் ஒருங்கிணைப்பு முழுமையாக இல்லாமல் குறீயீட்டை அடைய வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவரும் கருத்துக்களை பதிவு செய்தனர். அதில், கடந்த 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிபுரிவதை கூட கருத்தில் கொள்ளாமல் நற்சான்று விருது வழங்குவதில், துறையின் மாவட்ட அதிகாரிகள் கொடுத்த பட்டியலை நிராகரித்து, சுகாதாரத்துறையை அவமதிக்கும் வகையில் முடிவெடுத்ததை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் காணொலி ஆய்வு கூட்டத்தின் போதும், நேரடி ஆய்வுகளின் போதும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அவமதிக்கும் விதமாக நடந்து கொள்வதை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக போராட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்பது உள்ளிட்ட முடிவுகள் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!