Home செய்திகள் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையருடன் திண்டுக்கல் மாவட்ட TARATDAC நிர்வாகிகள் சந்திப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அவர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரும் வகையில்  தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி, மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகவள்ளி, மாவட்ட துணைச்செயலாளர் தங்கவேல், உயரம் தடைபட்டோர் மாநில செயலாளர் வெங்கடேஷ், மாநில தலைவர் ஜான்சிராணி, மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சென்னையில் உள்ள மாநில மாற்றுத்திறனாளிகள் தலைமை அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் உயர்திரு. ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்களை சந்தித்தனர்.

ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை விரிவாக விளக்கப்பட்டது.குறிப்பாக இதில் அதிக நேரம் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைத்தனர்.மேலும், திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் கழிப்பறை வசதி இல்லாதது, மாற்றுத்திறனாளிகள் அலுவலக சுவர் இடிந்து விழும் நிலையில் இருப்பது, மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகள், மாணவர்களும் ஆசிரியர்களும் இல்லாமல் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்படும் சிறப்பு பள்ளிகள், முறைகேடாக நடக்கும் இந்த பள்ளிகளால் தமிழக அரசிற்கு ஏற்ப்படும் இழப்புகள், சிறப்பு பள்ளிகளில் CCTV கேமரா பொருத்துவதன் அவசியம், நிபந்தனையின்றி வங்கிக்கடன் வழங்க வேண்டும், பழனியில் மனநல காப்பகம் அமைப்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படாதது, அதற்கான முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படாதது, விதிகளுக்கு மாறாக ஒரு கால் செயல் இழந்தவர்களுக்கும் மோட்டார் பைக் வழங்குவது, மோட்டார் பைக் வழங்கும்போது உடனடியாக RC புத்தகம் வழங்காமல் மாதக்கணக்கில் இழுத்தடிப்பது, தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் 20 ரூபாய் பத்திரத்தில் பைக்கை விற்க மாட்டேன் என எழுதி வாங்குவது,

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் முறையாக அளவீடு செய்யப்படாதது, வருடக்கணக்கில் காக்க வைப்பது, மாற்றுத்திறனாளிகள் துரையின் கீழும் தேவையான செயற்கை உபகரணங்களை மாவட்டத்திலிருந்து கேட்டுப்பெறாதது, தாலிக்கு தங்கம் உள்ளிட்டவற்றை பயனாளிகளிடம் உரிய நேரத்தில் வழங்காமல் மாதக்கணக்கில் காக்க வைப்பது, வீல்சேர் கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு கையிருப்பு இருந்தும் தராமல் இருப்பது,அடையாள அட்டையை ஒரே நாளில் வழங்காமல் வாரக்கணக்கில் அலைய விடுவது, புதிதாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கிட வேண்டும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளில் பலர் 1500 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு பதிலாக 1000 ரூபாய் உதவித்தொகை மட்டுமே பெறுவது உடனடியாக அனைவருக்கும் 1500 ரூபாய் கிடைக்க வலியுறுத்தியும் கோரிக்கை வைத்து பேசப்பட்டது.

கோரிக்கைகள் அனைத்தையும் பொறுமையாகவும் அதே சமயம் விளக்கமாகவும் கேட்டறிந்த மாநில ஆணையர் அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய கவனம் செலுத்துவதாகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை களைய உடனடியாக உரிய விசாரணை நடத்தி தீர்வு காண்பதாகவும் கூறியதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் விடைபெற்றதாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில்  செல்வநாயகம் – மாவட்ட தலைவர்S. பகத்சிங் – மாவட்ட செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com